Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

4 பந்துகளில் 92 ரன்கள்: என்ன பவுலர்யா இவன்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 12 ஏப்ரல் 2017 (16:24 IST)
வங்க தேசத்தில் Dhaka Second Division Cricket தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தான் இந்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

 
 
நேற்று நடைப்பெற்ற போட்டியில் அக்சியோம் அணியினரும் லால்மாட்டிய அணியினரும் மோதினர்.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லால்மாடிய அணி 14 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் எடுத்தது.
 
89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அக்சியோம் அணி களமிறங்கியது. லால்மாட்டிய அணி சார்பில் முதல் ஒவரை சுஜன் முகமது வீசியுள்ளார். இதில் 4 பந்துகள் வீசி 92 ரன்கள் கொடுத்து, அக்சியோம் அணியை வெற்றி பெற வைத்தார்.
 
தன்னுடைய ஓவரில் 65 ஒய்டு மற்றும் 15 நோ பால் வீசியுள்ளார். அதன் பின்னர் இவர் வீசிய நான்கு பந்துகளில் மூன்று பவுண்டரிகள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :