திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 22 ஜூலை 2021 (19:48 IST)

ஜிம்பாவே அணியை பந்தாடிய பங்களாதேஷ்: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

ஜிம்பாவே அணியை பந்தாடிய பங்களாதேஷ்: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
ஜிம்பாவே மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்த 19 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து 153 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது முகமது நசீம் மற்றும் சவுமியா சர்க்கார் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது