செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (22:04 IST)

புரோ கபடி: டெல்லி, கடைசி நிமிடத்தில் த்ரில் வெற்றி பெற்ற பெங்களூரு

புரோ கபடி போட்டியில் இன்றைய போட்டி ஒன்றில் பெங்களூரு அணி கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்று அசத்தியது. பெங்களூரு மற்றும் பாட்னா அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் சம நிலையில் புள்ளிகளைப் பெற்று இருந்தன. இந்த நிலையில் கடைசி ரெய்டு சென்ற பெங்களூரு அணியின் பவன்குமார் இரண்டு புள்ளிகளை எடுத்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினார். இந்த போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 40 புள்ளிகளையும் பாட்னா அணி 39 புள்ளிகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
முன்னதாக ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணி 44 புள்ளிகளும், டெல்லி அணி 46 புள்ளிகளும் பெற்றதையடுத்து டெல்லி அணி இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி, அரியானா, பெங்கால் ஆகிய மூன்று அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. தொடர் வெற்றியை பெற்று வரும் பெங்களூரு 4வது இடத்திலும் ஜெய்ப்பூர் அணி ஐந்தாவது இடத்திலும் மும்பை அணிஆறாவது இடத்திலும் உள்ளன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தமிழ் தலைவாஸ் அணி பத்தாவது இடத்திலும் இன்று தோல்வியடைந்த பாட்னா அணி கடைசி இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது