Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெங்களூரு அணி அபார வெற்றி! எகிறியது ரன்ரேட்

Last Modified திங்கள், 14 மே 2018 (22:28 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 48வது போட்டியில் பஞ்சாப் அணியை மிக எளிதில் வெற்றி பெற்ற பெங்களூர் அணிக்கு ரன்ரேட் எகிறியுள்ளது.
பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிட்ட நிலையில் 89 என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பார்த்தீவ் பட்டேல் மற்றும் விராத் கோஹ்லி அதிரடியாக விளையாடி, வெற்றிக்கு தேவையான ரன்களை விக்கெட் இழப்பின்றி 8.1 ஓவரில் 92 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாடத்தில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி 48 ரன்களும், பார்த்தீவ் பட்டேல் 40 ரன்களும் எடுத்தனர்
இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியல்
7வது இடத்தில் உள்ளது. தோல்வி அடைந்த பஞ்சாப் அணி 3வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு கீழிறங்கியது.


இதில் மேலும் படிக்கவும் :