1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (16:55 IST)

டூபிளஸ்சிஸ் - மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம்.. 200ஐ நெருங்குமா பெங்களூரு?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 32வது போட்டி இன்று பெங்களூரு நகரில் நடைபெற்று வருகிறது. பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 
 
முதல் பந்திலேயே பெங்களூர் கேப்டன் விராத் கோலி ஆட்டம் இழந்தபோதிலும் டூபிளஸ்சிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அபாரமாக  விளையாடினர். டூபிளஸ்சிஸ்  39 பந்துகளில் 62 ரன்களும் மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 77 ரன்களும் அடித்தனர் 
 
தற்போது இருவரும் அவுட் ஆகிவிட்டபோதிலும் தினேஷ் கார்த்திக் மற்றும் மஹிபால் ஆகியோர் விளையாடி வருகின்றனர். சற்றுமுன் பெங்களூர் அணி 15 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து உள்ள நிலையில் இன்னும் 5 ஓவர்களில் சுமார் 50 ரன்கள் எடுத்து 200ஐ நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran