அயர்லாதுக்கு எதிரான ஒருநாள் போட்டி: வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
அயர்லாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடந்த நிலையில் இந்த போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் முதலாவது ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி வென்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது
இந்த நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்த நிலையில் அதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்த அணி 101 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து வங்கதேச அணியை 102 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் விக்கெட் இழப்பின்றி 13 ஓவர்களில் இலக்கை எட்டியதால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனை அடுத்து இந்த தொடரை வங்கதேச அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva