1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 மார்ச் 2022 (18:49 IST)

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் குல்தீப் நீக்கம்: இணைக்கப்பட்ட வீரர் யார்?

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மார்ச் 12ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது
 
இந்த போட்டியில் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கடந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியில் விளையாடிய மற்ற வீரர்கள் இந்த போட்டியிலும் விளையாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது
 
அக்சர் படேல் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பதும் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது