செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (17:32 IST)

கிரிக்கெட்டின் டிரம்ப் நீ தான்: கோலியை சாடும் ஆஸ்திரேலிய ஊடகம்!!

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 


 
 
முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
 
ராஞ்சி டெஸ்டின் முதல் நாளில் பவுண்டரி தடுக்கும் முயற்சியின் போது கோலிக்கு வலது தோள் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதை கண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் கேலி செய்தனர். இதற்கு ஸ்மித்தை செய்தியாளர்கள் சந்திப்பில் காட்டமாக தாக்கினார் கோலி.
 
இது தவிர, ஆஸ்திரேலிய ஊடகங்கள் எப்போதும் சர்ச்சைப்பற்றியே கேள்வி எழுப்புவதாக கோலி கூறியதாக தெரிகிறது. இதனால் கடுப்பான ஆஸ்திரேலிய ஊடகம் விளையாட்டு உலகின் டொனால்டு டிரம்ப் கோலி என செய்தி வெளியிட்டுள்ளது.
 
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை போலவே கோலி எதற்கு எடுத்தாலும், ஊடங்களை குறை சொல்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.