Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியா மீது குற்றம் சுமத்தும் ஆஸ்திரேலியா...

Last Updated: வியாழன், 3 மே 2018 (14:57 IST)
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி 20 ஆட்டங்கள், 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 
 
இந்நிலையில், பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.
 
இந்த சுற்றுபயணத்தின் போது டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் டிசம்பர் 6 முதல் 10 வரை அடிலெய்டில் நடைபெறும் எனவும்,  போட்டியை பகலிரவாக பிங்க் பந்தில் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பியது. 
 
ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விருப்பத்தையும், வேண்டுகோளையும் பிசிசிஐ நிராகரித்துள்ளது. காரணம், இதுவரை நடந்த 3 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியே வெற்றிபெற்றுள்ளது. 
 
இதுகுறித்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் கூறியதாவது, கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலத்தைவிட தொடரை வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே இந்தியா கவனம் செலுத்துகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்துவதில் ஒரு உணர்வும், உண்மையும் இருக்கிறது. ஆனால், இதை இந்தியா புரிந்துக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :