1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜனவரி 2020 (13:32 IST)

இந்தியாவை வென்று புன்னகையை கொண்டு வருவோம்! – கேப்டன் ஃபின்ச் உறுதி!

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பற்றி எரிந்து வரும் நிலையில் இந்தியாவை வென்று மக்களை புன்னகைக்க செய்வோம் என ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் கூறியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. 14ம் தேதி மும்பையில் முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் “இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சிரமமான ஒன்றுதான். கடந்த முறை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடரை கைப்பற்றினோம். அதேபோல இந்த முறையும் கைப்பற்றுவோம்.

ஆஸ்திரேலியாவில் எரிந்து வரும் காட்டுத்தீயால் மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவர்கள் முகத்தில் ஒரு சிறு புன்னகையை உண்டாக்கவாவது இந்தியாவை வெல்வோம்” என கூறியுள்ளார்.