செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (17:13 IST)

ஆஸ்திரேலிய வீரர் வீசிய பவுன்ஸர் பந்து ...நிலைகுலைந்த இலங்கை வீரர்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் வீசிய பவுன்ஸர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் கருணரத்னே நிலைகுலைந்து மைதனத்தில் கீழே சரிந்தார்.
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான  2 வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியின் 2வது நாளான இன்று இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.இதில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் வீசிய பவுன்ஸர் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான கருணாரத்னே ஹெல்மெட்டில் பட்டு சென்றது. இதனை சற்றும் எதிர்பாராத கருணாரத்னே மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.
 
பின்னர் ஸ்டெரெச்சர் வழவழைக்கப்பட்டு கருணாரத்னே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் சற்று நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.