1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 மார்ச் 2023 (17:33 IST)

விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 118 என்ற இலக்கை ஆஸ்திரேலியா அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து அனைத்து விக்கட்டைகளையும் 117 ரன்களுக்கு இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 118 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹெட் மற்றும் மார்ஷ் ஆகிய இருவருமே அடித்து முடித்துவிட்டனர். இந்திய அணி இந்த போட்டியில் படுதோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஹெட் 51 ரன்களும், மார்ஷ் 66 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியின் இரு இன்னிங்ஸ் சேர்ந்து மொத்தமே 37 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளன
 
Edited by Siva