ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட்… காயத்தால் பல ஆஸி வீரர்கள் நீக்கம்!
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியை ஆஸி அணி மிக எளிதாக வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
பாரம்பரியமிக்க ஆஸி- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் ஆஸி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நான்காள் நாளிலேயே வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் 16 ஆம் தேதி தொடங்க உள்ள இரண்டாவது போட்டியில் வெற்றிக்கு மிக முக்கியமான காரணிகளாக அமைந்த டேவிட் வார்னர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சதமடித்த டிராவிஸ் ஹெட்டும் விளையாடுவது சந்தேகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆஸி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.