Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஸ்வினுக்கு கேப்டன் பதவியா? பஞ்சாப் பரிசீலனை

Last Modified செவ்வாய், 30 ஜனவரி 2018 (04:18 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின் தொடர்வார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய இடத்தை ஹர்பஜன்சிங் பிடித்துவிட்டதால், பஞ்சாப் அணி அஸ்வினை அள்ளி கொண்டு சென்றது. இதனால் தமிழக ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது பஞ்சாப் அணியின் கேப்டன் போட்டியில் அஸ்வின், யுவராஜ் சிங், ராகுல் மற்றும் ஃபின்ச் அகியோர் இருந்தாலும், அஸ்வினுக்கு கேப்டனாகும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

கேப்டன் பதவிக்காகவே அஸ்வினை ரூ.7.6கோடி கொடுத்து பஞ்சாப் அணி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பஞ்சாப் அணியின் பெயரும் மாற்றப்பட்டவுள்ளதகவும் தெரிகிறது. புதிய பெயர், புதிய கேப்டனுடன் பஞ்சாப் அணி புத்துணர்ச்சியுடன் களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :