வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (11:48 IST)

தொடங்கியது 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: 45 நாடுகள் பங்கேற்பு

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவில் தொடங்கவுள்ளன.

17 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் செப், 19 ல் தொடங்கி அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆசிய கண்டத்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் இந்தியா தரப்பில் 516 பேர் கொண்ட குழு தென்கொரியா சென்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக 28 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது. ஆசிய விளையாட்டின் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. பின்னர் கலை நிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும் நடைபெறுகிறது.

இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதல், தடகளம், கபடி, மல்யுத்தம், பேட்மிண்டன், பளுதூக்குதல், வில்வித்தை, ஹாக்கி போன்ற பிரிவுகளில் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பேட்மிண்டனில் சாய்னா நேவால், பி.வி.சிந்து, காஷ்யப் ஆகியோருக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்புள்ளது.

இந்திய டென்னிஸ் அணியில் சானியா மிர்சா மட்டும் கொஞ்சம் நம்பிக்கை தர காத்திருக்கிறார். அவர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வாங்கலாம். குத்துச்சண்டை அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

கபடி போட்டியில் ஒவ்வொரு முறையும் இந்திய அணியே தங்கம் வென்றிருக்கிறது. இந்த முறையும் கபடியில் இந்தியாவின் ஆதிக்கத்தைத் தளர்த்துவது கடினம் தான்.

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு அதிகமான பதக்கங்கள் தடகளத்தில்தான் கிடைத்திருக்கின்றன. இதில் இதுவரை 219 பதக்கங்கள் வந்துள்ளன. முன்னாள் தடகளபுயல் பி.டி.உஷா ஆசிய விளையாட்டு போட்டிகளில் அதிக பதக்கம் வென்ற இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.