அஜித் ஸ்டைலில் ஆடாமல் சாதனை படைத்த அஸ்வின்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 27 ஜூலை 2017 (21:32 IST)
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

 
 
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியலில் அஸ்வின் பெயர் இடம் பெற்றதும் அவர் சாதனை படைத்தார்.
 
அதாவது, நேற்றைய போட்டி அஷ்வினின் 50 வது டெஸ்ட் போட்டியாகும். அஷ்வின், இதுவரை 50 டெஸ்டில் பங்கேற்று 275 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் முதல் 50 டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
 
முன்னதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்லி முதல் 50 டெஸ்டில் 262 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. 
 
அஜித் படத்தில் வரும் பாடல் வரியான ஆடாம ஜெய்ச்சோமடா... என்பது போல அஷ்வின் போட்டியில் ஆடுவதற்கு முன்னறே சாதனை படைத்துவிட்டார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :