1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 3 ஜூலை 2023 (06:58 IST)

ஆஷஸ் 2வது டெஸ்ட் கிரிக்கெட்: இலக்கை நெருங்கிய நிலையில் இங்கிலாந்து தோல்வி..!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது ஆஷஸ்  கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இலக்கை நெருங்கிய நிலையில் பரிதாபமாக தோல்வி அடைந்தது 
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரன்களும் எடுத்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 327 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததை அடுத்து ஆஸ்திரேலியா அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva