ஆஷஸ் 2 ஆவது டெஸ்ட்டில் முக்கிய வீரர் விலகல் – இங்கிலாந்துக்கு மேலும் பின்னடைவு !

Last Modified புதன், 7 ஆகஸ்ட் 2019 (12:19 IST)
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளார் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் போட்டியை இழந்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் நட்சத்திர பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 ஓவர்களே வீசிய நிலையில் காலின் பின்புறம் ஏற்பட்ட தசைப் பிடிப்பால் பாதியிலேயே மைதானத்தை விட்டு சென்றார்.

இந்நிலையில் இப்போது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டதில் அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பயிற்சி முகாமுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை இங்கிலாந்து மற்றும் லான்ஷயர் கிளப் மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் 14 ஆம் தேதி நடக்கும் 2 ஆவது ஆஷஸ் டெஸ் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :