வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 மார்ச் 2021 (12:13 IST)

சச்சினை அடுத்து மேலும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு!

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு என்று வெளியான செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் சச்சினை அடுத்து மேலும் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யூசுப் பதானு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இன்று எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறி இருந்ததை அடுத்து நான் சோதனை செய்ததில் எனக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது. இதனை அடுத்து நான் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வருகிறேன். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டு இருக்கின்றேன்
 
இந்த நிலையில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அனைவரும் பாதுகாப்பாக வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
 
நேற்று சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என யூசுப் பதான் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்த நிலையில் தற்போது அவருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது 
 
சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் யூசுப் பதான் உள்பட பலர் ஓய்வு பெற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது