1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (09:31 IST)

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஒருநாள் தொடர் போட்டி ஒத்திவைப்பு!

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஒருநாள் தொடர் போட்டி ஒத்திவைப்பு!
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த ஒருநாள் போட்டி தொடர் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து எந்த விதமான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற இருந்த நிலையில் அந்த தொடர் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு  தெரிவித்துள்ளது
 
தற்போது உள்ள சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாட முடியாது என்றும் அதனால் இந்த போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்த போட்டி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது