1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

11 விக்கெட்டுக்களை வீழ்த்திய ரஷித்கான்: ஆப்கானிஸ்தான் அபார வெற்றி! 545 108 287 108

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாவே நாடுகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 10ஆம் தேதி தொடங்கிய நிலையில் சற்று முன் முடிவுக்கு வந்தது
 
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானில் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித்கான் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியின் வெற்றிக்கு அபாரமாக உதவியுள்ளார்
 
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்புக்கு 545 ரன்கள் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் மீண்டும் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் என்ற நிலையில் மீண்டும் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் மிக அபாரமாக பந்து வீசி ரஷித்கான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். இதனை அடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது