1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (17:39 IST)

உலகக்கோப்பையை அறிமுகம் செய்த முதல் இந்திய நடிகை.. வைரல் புகைப்படம்..!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 10 நாட்டின் அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உலக கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்துள்ளது. 
 
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த உலக கோப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் நடிகை மீனா கலந்து கொண்டு உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை அறிமுகப்படுத்திய முதல் இந்திய நடிகை மீனாதான் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 
 
இந்த நிகழ்ச்சியில்  பாலிவுட் நடிகை ஊர்மிளா உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா பதிவு செய்து உலக கோப்பையை அறிமுகப்படுத்துவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran