1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (15:50 IST)

கோலி வழக்கமான ஆசிய வீரர்… அவருக்கு ஸ்விங் பந்துகளை ஆட தெரியாது… பாக் பவுலர் விமர்சனம்!

கோலி கடந்த இரு ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காமல் சொதப்பி வருகிறார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து விதமான போட்டிகளிலும் 50 க்கும் மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேன். ஆனால் கொரோனா பெருந்தொற்று காலம் அவருக்கு மிகப்பெரிய சோதனைக்காலமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

இப்போது இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து அவர் 124 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத் ‘கோலி சாதாரணமான ஆசிய வீரர்தான். ஆசிய வீரர்களுக்கு ஸ்விங் பந்துகளை ஆடத் தெரியாது. பந்தை தேவையில்லாமல் சேஸ் செய்து அவுட் ஆவார்கள். எல்லா ஆசிய வீரர்களை போலதான் கோலியும் இந்த விஷயத்தில்.’ எனக் கூறியுள்ளார்.