செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 6 ஜூலை 2019 (06:32 IST)

தொடர்ச்சியாக 4வது முறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று பாகிஸ்தான் அணி, வங்கதேச அணியை வென்றபோதிலும் போதிய ரன்ரேட் இல்லாததால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. இதனையடுத்து ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது
 
இந்த நிலையில் நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக நான்காம் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிபிடத்தக்கது. கடந்த 2007, 2011, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகள் என தொடர்ச்சியாக நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
 
அதுமட்டுமின்றி கடந்த 1975, 1979, 1992 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதுவரை இந்த அணி ஒருமுறை கூட உலகக்கோப்பையை வெல்லவில்லை என்பது பரிதாபத்திற்குரியது. இந்த முறையாவது நியூசிலாந்து, உலகக்கோப்பையை வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்