வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 மார்ச் 2017 (12:18 IST)

மாற்றங்கள் கைகொடுக்குமா? வெற்றியை நோக்கி 2 வது டெஸ்டில் இந்தியா!!

இந்தியா ஆஸ்திரேலியா இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 333 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. 


 
 
இவ்விரு அணிகள் மோதும் 2-வது போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி கேப்டன் கோலி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தேர்ந்தெடுத்தார்.
 
இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக தொடக்க வீரர் முரளி விஜய், சுழற்பந்து வீரர் ஜெயந்த் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக அபினவ் முகுந்த், கருண் நாயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 
 
ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர். 
 
ராகுலும், அபினவ் முகுந்தும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆனால், இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சிகரமாக இருந்தது. 
 
அபினவ் முகுந்த் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாய் புஜாரா அவுட் ஆனார்.
 
தற்போது 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 72 ரன்கள் குவித்து உள்ளது. ராகுல் மற்றும் கோலி களத்தில் உள்ளனர்.