திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (14:29 IST)

ஐபிஎல் தொடரில் 26 வெளிநாட்டு வீரர்கள் விளையாட மாட்டார்களா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் 26 வெளிநாட்டு வீரர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட போட்டிகளில் விளையாட இருப்பதால் ஆரம்பகட்ட ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது
 
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று தொடர்கள் தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த தொடரில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஐபிஎல் போட்டிகளில் ஆரம்பத்தில் சில போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டியில் முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படும் 26 வீரர்களின் பட்டியல் இதோ: 
 
ஜோஃப்ரா ஆர்ச்சர், பாட் கம்மின்ஸ், ஆரோன் ஃபின்ச், ரஸ்ஸி வான் டெர் டுசென், மார்கோ ஜான்சன், சீன் அபோட், ஐடன் மார்க்ரம், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், அன்ரிச் நார்ட்ஜே , டுவைன் பிரிட்டோரியஸ், ரஹ்மான், லுங்கி என்கிடி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட், ஜானி பேர்ஸ்டோ, ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ், மார்க் வூட், குயின்டன் டி காக், டேவிட் மில்லர், அல்ஸாரி ஜோசப்.