ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (21:21 IST)

சிஎஸ்கே அணிக்கு 192 ரன்கள் இலக்கு.. சாதிக்குமா ருத்ராஜ் டீம்..!

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இதனை அடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்கள் எடுத்த நிலையில் அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக 200க்கும் மேல் போக வேண்டிய ஸ்கோர் 191 இல் முடிவுக்கு வந்தது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் பதிரனா மிகச் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டைகளை வீழ்த்தினார். ஜடேஜா மற்றும் ரஹ்மான்  தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த நிலையில் 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் நீண்ட பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருப்பதால் அந்த அணி எளிதில் இந்த போட்டியை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva