திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (17:12 IST)

மும்பை அணிக்கு ராஜஸ்தான் கொடுத்த இலக்கு இதுதான்!

மும்பை அணிக்கு ராஜஸ்தான் கொடுத்த இலக்கு இதுதான்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது
 
ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களும், ஜோஸ் பட்லர் 41 எடுத்துள்ளனர் ஷிவம் டுபே 35 ரன்களும் ஜெய்ஸ்வால் 32 ரன்கள் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் மும்பை அணி 172  என்ற ரன்கள் இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் ரோகித் சர்மா, டீகாக், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு ஆகிய ஐந்து நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த இலக்கை எளிதில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது