செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 2 ஏப்ரல் 2022 (17:31 IST)

ஜோஸ் பட்லரின் அபாரசதம்… பூம்ராவின் கடைசி ஓவர் மேஜிக்… மும்பைக்கு 194 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 15 ஆவது சீசனின் இன்றைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.

ஐபிஎல் 2022 சீசனின் 9 ஆவது போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மும்பையில் உள்ள பாட்டில் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேடன் ரோஹித் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும் தொடக்க  வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 100 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் மிகவும் வலுவான நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி பூம்ராவின் 19 ஆவது ஓவரில் 3 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்ததால் 200 ரன்களை எட்ட முடியவில்லை. இதையடுத்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது. பூம்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.