Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை

ஞாயிறு, 26 ஜூலை 2015 (11:38 IST)

Widgets Magazine

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த், இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றச்சாட்டுக்களில் இருந்து டில்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை
ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்தும், அவரது சக விளையாட்டு வீர்ர்களான அஜித் சண்டிலா மற்றும் அன்கீட் சவான் ஆகியோர் மீது 2013இல் ஏமாற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
தாம் எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை என்று இந்த மூன்று வீர்ர்களும் வலியுறுத்தி வந்தனர். இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் போதாது என்று கூறிய நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான 
குற்றச்சாட்டுக்களில் இருந்து இவர்களை சனிக்கிழமை விடுவித்தது.
 
இந்த தீர்ப்பு தனக்கு பெரும் நின்மதியை தந்துள்ளதாக ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். தான் எவருக்கு எதிராகவும் எதுவும் செய்யவில்லை என்று கூறிய அவர், கடவுள் விரும்பினால் தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப வருவேன் என்று இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறியுள்ளார்.
 
ஒரு மோசமான கனவு முடிவுக்கு வந்திருப்பதாக சண்டிலா கூறியுள்ளார். மீண்டும் கிரெக்கெட் ஆட தான் முயல்வதாக சவான் கூறியுள்ளார்.
 
ஸ்பாட் பிக்ஸ்ங் குறித்த ஒரு பொலிஸ் புலனாய்வின் அடிப்படையில் இந்த மூன்றுவீர்ர்களும் பல புக்கிகளோடு சேர்த்து 2013இல் கைது செய்யப்பட்டனர்.
 
ஸ்ரீசாந்த் இந்தியாவுக்காக 27 டெஸ்ட் போட்டிகளிலும் 53 ஒரு நாள் ஆட்டங்களிலும் ஆடியிருக்கிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் விடுவிப்பு

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வீரர்கள் டெல்லி நீதிமன்றத்தால் ...

news

அறுவை சிகிச்சைக்கு தயாராகும் கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான கிறிஸ் கெய்ல் முதுகுவலி காரணமாக அறுவை சிகிச்சை

news

தோனியின் கருத்தை புறக்கணித்த தேர்வுகுழு

புதிய வேகப்பந்து வீந்துச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என கூறிவந்த தோனியின் கருத்தை ...

news

பிறந்தார் குட்டி டி வில்லியர்ஸ்; குவியும் வாழ்த்துக்கள்

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனும், அதிரடி வீரருமான டி வில்லியர்ஸுக்கு ஆண் குழந்தை ...

Widgets Magazine Widgets Magazine