வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. கட்டுரைகள்
Written By
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (12:17 IST)

ISPL தொடரின் இரண்டாவது போட்டியில் சூர்யா அணி வெற்றி!

ISPL  T10 எனப்படும் இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக் தொடர் சமீபத்தில் தொடங்கியது.  இதில் பங்கேற்கும் ஒரு அணியான சென்னை அணியின் உரிமையாளராக நடிகர் சூர்யா உள்ளார். சமீபத்தில் தொடங்கிய இந்த கிரிக்கெட் லீக்கின் தொடக்க ஆட்டத்தில் அவர் கலந்துகொண்டு சச்சின்  மற்றும் ரெய்னா ஆகியோரோடு விளையாடினார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் சூர்யாவின் சிங்கம்ஸ்  அணியும் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா அணியும் அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த சென்னை சிங்கம்ஸ் அணி 10 ஓவர்களில் 121 ரன்கள் சேர்த்தது.

பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 113 ரன்கள் மட்டுமே சேர்த்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் சூர்யாவின் சிங்கம்ஸ் அணி தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.