தோனி இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது - இயன் சாப்பல்!
ஒரு டெஸ்ட் கேப்டனாக கிரிக்கெட் உலகில் இவ்வளவு விவாதங்களுக்கு இடமளித்திருப்பவர் சமீப காலங்களில் இந்திய கேப்டன் தோனி அளவுக்கு ஒருவரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் ஆஸ்ட்ரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல்! இது குறித்து பிரபல கிரிக்கெட் இணையதளத்தில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:குறுகிய வடிவத்தில் தோனி அபார கேப்டன், மிடில் ஆர்டரில் இறங்கி போட்டியை இந்தியாவின் வெற்றியாக மாற்றக்கூடிய அபூர்வத் திற்மை படைத்தவர் என்பதில் ஐயமில்லை.
ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரது உத்திகள் பிற்போக்குத் தனமாக உள்ளது. இதனால் எதிரணியினரில் சாதாரண பேட்ஸ்மென்கள் கூட ரன்களை குவிக்க நேரிடுகிறது. ஒரு ஞாபக மறதி பேராசிரியர் என்னவென்று தெரியாமல் தெருவில் சுற்றுவது போல் திணறுகிறார் தோனி. இவரது இந்த பிற்போக்குத் தன அணுகுமுறையினால் மெக்கல்லம், வாட்லிங் பார்டன்ர் ஷிப் மலர்ந்தது.