வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2015 (10:14 IST)

வேதாளம், தூங்கா வனம் படங்களின் வசூல் நிலவரம்

கடந்த பத்தாம் தேதி தீபாவளிக்கு வெளியான வேதாளம், தூங்கா வனம் படங்கள் இரண்டும் கடும் மழையிலும் கணிசமான வசூலை பெற்றுள்ளன. வேதாளம் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது.


 
வேதாளம் பத்தாம் தேதி தமிழகத்தில் 15.5 கோடிகள் வசூலித்து கத்தி படத்தின் முதல்நாள்
வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
 
தமிழ் சினிமா வரலாற்றில் இதுதான் அதிகபட்ச முதல்நாள் வசூல் என்கிறார்கள். இதற்கு முன் விஜய்யின் கத்தி 12.5 கோடிகளும், ரஜினியின் லிங்கா 12.8 கோடிகளும் வசூலித்திருந்தன.
 
வேதாளத்துடன் வெளியான தூங்கா வனம் முதல் நாளில் 4 கோடிகள் வசூலித்துள்ளது. அந்தப் படத்தின் பட்ஜெட்டுக்கு 4 கோடிகள் நல்ல ஓபனிங் என்றே கூற வேண்டும்.
 
வேதாளம் வேறு பல சாதனைகளையும் புரிந்துள்ளது.
 
நெல்லையில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கில் விஜய் நடிக்கும் படங்கள் திரையிடப்படும். விஜய் ரசிகர்களின் கோட்டை ராம் முத்துராம் திரையரங்கு. அங்கு கத்தி படம் முதல் நாளில் 13.5 லட்சங்கள் வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
 
வேதாளம் அதனை முறியடித்துள்ளது. முதல் நாளில் வேதாளம் ராம் முத்துராமில் 14 லட்சங்கள் வசூலித்துள்ளது.
 
சென்னையைப் பொறுத்தவரை வேதாளமே முன்னணியில் உள்ளது. முதல்நாள் பத்தாம் தேதி வேதாளம் சென்னையில் 70.20 லட்சங்களை வசூலித்துள்ளது.
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

கமலின் தூங்காவனம் 34.05 லட்சங்களுடன் பின்தங்கியுள்ளது. 
 
தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் வேதாளம் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தூங்கா வனம். கடும் மழை காரணமாக இவ்விரு படங்களின் வசூலும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 


 


 
வெளிநாடுகளிலும் இரு படங்களும் நல்ல வசூலை பெற்றுள்ளன. தூங்காவனம் யுஎஸ்
ஸில் ப்ரிமியர் காட்சிகளையும் சேர்த்து முதலிரு தினங்களில் 1.4 கோடியை வசூலித்துள்ளது.
 
அதே இரு தினங்களில் வேதாளம் தூங்கா வனத்தைவிட முப்பது லட்சங்கள் குறைவாக வசூலித்துள்ளது. 
 
யுஎஸ் போன்ற வேறு சில நாடுகளிலும் வேதாளத்தை தூங்காவனம் பின்னுக்கு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.
 
தூங்கா வனத்தின் தெலுங்குப் பதிப்பான சீகட்டி ராஜ்ஜியமும், வேதாளத்தின் தெலுங்குப் பதிப்பான ஆவேசமும் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த வாரமே இவ்விரு படங்களும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியாகின்றன. 
 
தமிழகத்தைப் போல ஆந்திராவிலும் இரண்டு படங்களும் வசூலை அள்ள வாய்ப்புள்ளது.