வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (12:04 IST)

சிம்புவின் சுவாரஸிய ட்விட்டர் உரையாடல்

சிம்பு ட்விட்டர் மூலமாக அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவார். வில்லங்கமான கேள்விகளுக்கும் பதில் வரும் அவரிடமிருந்து.
 

 

 

 
இந்தமுறை கேள்விகளில் விஜய்யும் இடம் பிடித்திருந்தார். வாலு வெளியாக உதவியதன் மூலம் சிம்புவின் உடன்பிறவா சகோதரர் ஆகிவிட்டாரல்லவா விஜய்.
 
நடிகர் விஜய்யை உங்கள் படத்தில் நடிக்க அழைப்பீர்களா என வில்லங்கமாக ஒரு கேள்வி.
 
விஜய்யை என்னுடைய படத்தில் நடிக்க அழைப்பது நியாயமாக இருக்காது. ஆனால், அவர் அவருடைய படத்தில் நடனம் ஆட அழைத்தால் நிச்சயம் போய் நடனமாடுவேன் என்று தெரிவித்தார்.
 
இது நம்ம ஆளு படத்தின் வெளியீடு குறித்தும் ஒரு கேள்வி. படம் எப்போது வரும், தீபாவளிக்கா?
 
தல படம் தீபாவளிக்கு வந்தால், இது நம்ம ஆளு படத்தின் ரிலீஸ்...
மேலும் அடுத்தப் பக்கம்...

தள்ளிப் போகும். தல படம் தீபாவளிக்கு வராவிட்டால் இது நம்ம ஆளு படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் பதிலளித்துள்ளார்.


 

 
சிம்பு என்றால் தனுஷ் இல்லாமலா? தனுஷ் நடித்தப் படங்களில் எது சிம்புவுக்குப் பிடிக்கும்?
 
தனுஷ் படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். ஆனாலும், காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆடுகளம் மிகவும் பிடிக்கும் என நேர்மையாக பதிலளித்துள்ளார் சிம்பு.
 
நடிகர் சங்க விவகாரத்தில் சிம்பு சரத்குமார் பக்கம். இது குறித்த கேள்விக்கு, நடிகர் சங்க விவகாரத்தில் விரைவில் தீர்வு கிடைக்கும் என பட்டும் படாமலும் பதிலளித்துள்ளார்.
 
நின்றுபோன வேட்டை மன்னன் இன்னும் ரசிகர்கள் மனதிலிருந்து விலகவில்லை. வேட்டை மன்னன் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. புதிய தகவல் ஏதாவது இருந்தால் நானே தெரிவிக்கிறேன் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.
 
எந்த நடிகருக்கும், யாராவது ஒரு முக்கிய இயக்குனரின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிம்புவுக்கு?
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக சிம்பு தெரிவித்துள்ளார்.
 
அடுத்தமுறை நயன்தாரா, ஹன்சிகா பற்றியும் காரசாரமாக பேசுங்க சிம்பு.