வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (13:16 IST)

சினி பாப்கார்ன் - சிம்புவின் ஆன்மீகம்... சிரிக்காம படிங்க

த்ரிஷாவுக்கு தொடர்ந்து தமிழ் கற்றுத்தரும் கமல்
 
த்ரிஷாவுக்கு தமிழ் கற்றுத்தர வேண்டும் என்பதற்காகவே வரம் கிரம் வாங்கி வந்திருக்கிறாரா கமல்? மன்தமன் அம்பு படத்தில் தொடங்கிய கமலின் தமிழாசிரியர் பணி, தூதுhங்கா வனத்திலும் தொடர்கிறது.
பேட்டிகளில் பெரும்பாலும் தூய தமிழில் உரையாடுகிறவர் கமல். படத்தில் வரும் புலி, எலிகளை கிராபிக்சில் மட்டமாக காட்டினாலும், நடிகர்களின் தமிழ் உச்சரிப்பில் கமல் ரொம்பவே கறார். த்ரிஷாவின் தமிழ் உச்சரிப்பை டப்பிங்கில் செதுக்கி சீராக்குவது கமலின் தலையாய பணி. மன்மதன் அம்பு போலவே தூங்கா வனத்திலும், த்ரிஷாவின் அருகிலிருந்து அவரது தமிழ் உச்சரிப்பை திருத்தி சீர்ப்படுத்தினார். 
 
கமல் கறுப்பு சட்டை, வெள்ளை வேட்டியில் இருக்க, அருகில் கதாகாலேட்சபம் சொய்யும் பாணியில் கால்களை மடக்கி அமர்ந்து த்ரிஷா டப்பிங் பேசுவது பார்க்க கொள்ளை அழகு.

என்னமோ தெரியலை ஒரு தெம்பு வருது
 
ஏன் ரஜினி படப் பெயரை உங்கள் படத்தின் பெயராக வைத்திருக்கிறீர்கள் என்று யாரிடம் கேட்டாலும், மேலே உள்ளது போல்தான் பதிலளிக்கிறார்கள். சுசீந்திரன் விஷாலை வைத்து இயக்கியிருக்கும் படம், பாயும் புலி. ஏன் இந்த பெயர்?
அந்த பெயரை வச்சாலே பாதி விளம்பரம் கிடைச்சிடுது என்றார் சுசீந்திரன். தவிர, படத்திலும் விஷால், முதலில் பதுங்கி பிறகு பாய்வாராம், புலி மாதிரி. அதனால் இந்த பெயர் ஆப்டாக இருக்கும் என்று தேர்வு செய்தோம் என்றார். 
 
பாபி சிம்ஹாவின் படத்தின் பெயர், வீரா. ஏன் வீரா? ஹீரோ ரொம்ப வீரமானவர். சண்டையெல்லாம் போடுவார் என்று எகனை மொகனையாக ஏதாவது சொல்வார்கள். அதனால் கேட்கவே இல்லை. இதேபோல் ஜானி, பாட்ஷா, அண்ணாமலை என்று ரஜினியின் படப்பெயர்களை தங்கள் படங்களுக்கு வைக்க ஒரு கூட்டம் அலைகிறது. 
 
கதையை நம்பினால் எதுக்கு பெயருக்கு பின்னால் ஓடணும்?

சிம்புவின் ஆன்மீக கதை
 
நயன்தாரா, ஹன்சிகா என்று காதல் தேடி ஓடிய சிம்பு திடீரென்று ஒரு சுப்ரபாதத்தில் காவி உடுத்தி இமயமலைக்கு பயணமானது டோட்டல் தமிழ் நாட்டையும் அப்செட்டாக்கியது. அப்படியே சாமியராகி ரஜினீஸ் மாதிரி வருவாரோ என்று ஒருசிலருக்கு பயம். ஆனால், அப்படி எந்த பயங்கரவாதமும் செய்யவில்லை சிம்பு. போன வேகத்தில் திரும்பி வந்தார். கிளைமேட் ஒத்துக்கலை போல.
 

 
ரொம்ப தாமதமாக இப்போது, நான் ஏன் சாமியாரானேன் என பேட்டி தந்துள்ளார்.
 
சிம்பு சின்ன வயதிலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார் அல்லவா. எதுக்கு இப்படி சின்ன வயசிலயிருந்தே உழைச்சுகிட்டும் ஓடிகிட்டும் ஒருக்கணும் என்று ஒருநாள் சிம்புக்கு தோணியிருக்கு. உடனே ஆன்மீகத்தில் குதித்து இமயமலையில் மேலெழுந்திருக்கிறார்.
 
சரி, அங்கயே அப்படியே செட்டிலாகலாம்னுதான் இருந்தேன். ஆனா, சிம்பு பயந்துட்டான்னு சொல்வாங்கயில்லையா, அதனாலதான் ரிட்டர்ன் டிக்கெட் போட்டேன் என்றிருக்கிறார்.
 
அடுத்தவன் என்ன சொல்வான்னு யோசிக்காம, நமக்கு நல்லதுன்னு தோணுறதை செய்யணுங்கிறதுதான் ஆன்மீகத்தோட பாலபாடம். லௌகீகத்தின் அத்தனை சுகங்களையும் அனுபவிச்சுகிட்டு ஆன்மீக கொட்டாவிவிடுறதில் நடிகர்களை அடிச்சுக்க முடியாது. 
 
நீங்க பேசுங்கண்ணா.