வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 30 ஜனவரி 2016 (15:55 IST)

சிவ கார்த்திகேயனின் அசுர வளர்ச்சியும், ப்ரிய எதிரிகளும்

சிவ கார்த்திகேயனின் அசுர வளர்ச்சியும், ப்ரிய எதிரிகளும்

ரஜினி முருகன் போன்ற ஒரு படத்தில் எந்த நடிகர் நடித்திருந்தாலும், அப்படம் வசூலித்திருக்கும் கரன்சியில் பாதியை வசூலித்திருக்காது. சிவ கார்த்திகேயன் மீதிருக்கும் ரசிகர்களின் கிரேஸ் ஆச்சரியமளிப்பது.


 

 
 
வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் படங்களின் ஹிட் சிவ கார்த்திகேயனை ஒரேயடியாக உயரத்தில் தூக்கி வைத்தது. ரஜினியை இமிடேட் செய்யும் அவரது மேனரிசங்களும், டயலாக் டெலிவரியும் மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற மிகச்சுமார் படங்களையும் ஓட வைத்தது. என்னுடைய தம்பி என தனுஷால் அறிமுகப்படுத்தப்பட்டவர் இன்று தனுஷைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறார். இதுதான் அவருக்கு முதல் பகையை ஏற்படுத்தியது.
 
'என்னை தூக்கிவிட்டார்கள் என்பதற்காக குட்ட குட்ட குனிய முடியாது' என்று ஒன்றல்ல இரண்டு பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார் சிவ கார்த்திகேயன். அவர் சொல்வது தனுஷையா, விஜய் தொலைக்காட்சியா என்ற பட்டிமன்றம் ஓடுகிறது. யாராக இருப்பினும் சிவ கார்த்திகேயன் தனி வழியை தேர்வு செய்துவிட்டார்.
 
சிவ கார்த்திகேயனின் வெற்றியால், அவரது காட்பாதர் என்று நினைத்துக் கொண்டிருந்த தனுஷுக்கு பிரமாண்ட வெற்றி தேவைப்பட்டது. அதற்கேற்ப வேலையில்லா பட்டதாரியும் அமைந்தது. ஆனாலும், அதே பிளேவரில் அவர் நடித்த மாரியும், தங்கமகனும் காலை வாரியது. சிவ கார்த்திகேயனின் சுமார் படங்கள் வெற்றிபெற, அதேதரத்தில் வெளிவந்த தனுஷின் படங்கள் தோல்வியடைந்தன. சிவ கார்த்திகேயனுக்கு எதிராக படைதிரட்ட விஜய் சேதுபதியை வைத்து நானும் ரௌடிதான் படத்தை எடுத்தார் தனுஷ். ஆனால், இவையெல்லாம் சிவ கார்த்திகேயனின் மாஸை அணைபோடுவதாயில்லை.
 
தனுஷின் கொடி படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லை. அனிருத் பீப் பாடல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டதால் அவருக்குப் பதில் சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்ததாக கூறுகின்றனர். ஆனால் உண்மை வேறு. சிவ கார்த்திகேயனின் சொந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பதால்தான் அனிருத்தை தனுஷ் விலக்குகிறார். அந்தளவு பகை மூண்டிருக்கிறது.

சிவ கார்த்திகேயன் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படமும், மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கிறார். தனிஒருவன் போன்ற ஒரு மெகா ஹிட்டுக்குப் பின் மோகன் ராஜா சிவ கார்த்திகேயனை தேர்வு செய்ததில் பலருக்கும் கடும்பொறnமை. அத்துடன் ரஜினி முருகன் டீமை அப்படியே ஒப்பந்தம் செய்துள்ளது லைக்கா நிறுவனம். ரஜினியை வைத்து 2.0படத்தை தயாரித்து வரும் இவர்கள் பொன்ராம் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன்,சூரி நடிக்கும்; படத்தையும்தயாரிக்கிறnர்கள். இந்தப் படத்துக்கு பொன்ராமுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் 3 கோடிகள். சிவ கார்த்திகேயனுக்கு 15கோடிகள். எழுத்துப்பிழையல்ல, 15 கோடிகள்தான்.
 
அஜித், விஜய் ஆகியோருக்கு அடுத்து சிவ கார்த்திகேயனுக்கே இவ்வளவு பெரிய சம்பளம் தரப்பட்டிருக்கிறது. சூர்யாவுக்கு 15கோடிகள் தரவே தயாரிப்பாளர்கள் யோசிக்கிற காலம் இது.
 
இந்த அசுர வளர்ச்சியும், பிரமாண்ட சம்பளமும் தமிழ் திரையுலகுக்கு ஆரோக்கியமா இல்லையா என்று பேசப்படுகிறநிலையில், சிவ கார்த்திகேயனுக்கு மிகஆரோக்கியம் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.