1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (14:31 IST)

தூம் 3 -ஐ வீழ்த்திய கபாலியின் வெளிநாட்டு வசூல் - ஓர் விரிவான பார்வை

தூம் 3 -ஐ வீழ்த்திய கபாலியின் வெளிநாட்டு வசூல் - ஓர் விரிவான பார்வை

கபாலியின் வெளிநாட்டு வசூல், மற்றவர்கள் விழி பிதுங்கும் அளவுக்கு இருக்கிறது. யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ஓபனிங் வீக் எண்ட் வசூலில் முதலிடத்தில் இருந்த அமீர் கானின் தூம் 3 படத்தின் சாதனையை ஜஸ்ட் லைக் தட் முறியடித்திருக்கிறது கபாலி.


 
 
யுஎஸ்ஸில் அமீர் கானின் தூம் 3 முதல் வார இறுதியில் 3.88 மில்லியன் டாலர்கள் வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அமீர் கானின் பிகே 3.5 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்த சாதனையை கபாலி நையப்புடைத்திருக்கிறது. 
 
முதல்வார இறுதியில் கபாலி யுஎஸ்ஸில் 4.04 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தை கைப்பற்றியுள்ளது (சில இணையதளங்களில் 3.7 மில்லியன் டாலர்கள் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இது முழுமையான வசூல் கிடையாது. ஹாலிவுட் படங்களின் வசூலை வெளியிடும் இணையதளம் 4.04 என கபாலியின் உண்மையான வசூலை வெளியிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 26 கோடிகளாகும்). இது ஓபனிங் வீக் எண்ட் வசூல் சாதனை மட்டுமே. அதேநேரம் யுஎஸ் ஒட்டு மொத்த வசூலில் சாதனை படைக்க கபாலி இது போல் ஒரு மடங்கு இன்னும் வசூலிக்க வேண்டியுள்ளது. 
 
சல்மான் கானின் சுல்தான் கடந்த ஞாயிறுவரை யுஎஸ்ஸில் 31.61 கோடிகளை வசூலித்துள்ளது.
 
கனடா, யுகே மற்றும் அயர்லாந்து, ஆஸ்ட்ரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் கபாலியின் உண்மையான வசூல் இன்னும் வெளிவரவில்லை. ஆங்கில மற்றும் இந்தி இணையதளங்களில் மிகக்குறைவான தொகையையே கபாலி வசூல் என்று வெளியிட்டுள்ளனர். இது அந்த நாடுகளின் சில பகுதிகளில் கபாலி வசூலித்த தொகை மட்டுமே என்பது முக்கியமானது.
 
கனடாவில் கபாலி 1.67 கோடிகளும், யுகே மற்றும் அயர்லாந்தில் 2.47 கோடிகளும், மலேசியாவில் 4.66 கோடிகளும் வசூலித்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் இவை முழுமையான வசூல் கிடையாது. 
 
யுஎஸ் போன்று கபாலியின் முழுமையான வெளிநாட்டு வசூல் விவரம் விரைவில் அந்தந்த விநியோகஸ்தர்களால் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.