1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: திங்கள், 27 ஜூன் 2016 (12:28 IST)

தமிழில் உருவாகும் தழுவல்கள்

தமிழில் உருவாகும் தழுவல்கள்

பிற மொழிப்படங்களை முறையாக அனுமதி இல்லாமல் தழுவி எடுக்கப்படும் படங்கள் குறித்து இந்தியன் காப்பி கல்ச்சர் என்ற தலைப்பில் எழுதி வந்திருக்கிறோம். இதுவொரு தொடர் செயல்பாடு.



 


வருடந்தோறும் பிறமொழிப்படங்களை காப்பி செய்கிறவர்களின் எண்ணிக்கை தமிழில் அதிகரித்து வருகிறது. 
 
இரண்டு முக்கியமான திரைப்படங்கள் காப்பி கான்ட்ரவர்ஸில் சிக்கி உள்ளன. அவை எது என்று பார்ப்போம்.
 
ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மண் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடிப்பில் போகன் என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரபுதேவா இயக்கம். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இருவருமே போலீஸ் அதிகாரிகள். படத்தின் முதல் பாதியில் ஜெயம் ரவி நாயகனாகவும், இரண்டாம் பாதியில் வில்லனாகவும் இருப்பார். அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் அப்படியே உல்டா. முதல் பாதியில் வில்லன் இரண்டாம் பாதியில் நாயகன்.
 
இதே கதையில் ஹாலிவுட்டில் பல வருடங்களுக்கு முன்பு ஒரு படம் வந்தது. பெயர் பேஸ் ஆஃப். முதல் பாதியில் நிகோலஸ் கேஜ் வில்லன் இரண்டாம் பாதியில் நாயகன். முதல் பாதியில் ஜான் ட்ரவோல்டா நாயகன், இரண்டாம் பாதியில் வில்லன். ஜான் வூ இயக்கிய இந்தப் படத்தை அடிப்படையாக வைத்தே போகன் படம் தயாராவதாக தகவல். பேஸ் ஆஃப் படத்திலிருந்து எத்தனை சதவீதம் அடித்திருக்கிறார்கள் என்பது போகன் வந்தால்தான் தெரியும். 
 
இரண்டாவது படம், கடம்பன். மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் படம். ஆதிவாசியை மையப்படுத்திய இந்தப் படம் மெல்கிப்சன் இயக்கத்தில் வெளிவந்த அபோகலிப்டோ படத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது என தகவல் உள்ளது. ஆனால், இதனை நம்புவது சிரமம். அபோகலிப்டோவின் கதை அப்படி. 
 
ஆதிகாலத்தில் ஓர் இனக்குழு பிற இனக்குழுக்களை பலியிடும் சடங்கை முன் வைத்து எடுக்கப்பட்ட படம் அபோகலிப்டோ. அதனை அப்படியே எடுத்தால் சென்சாரில் ஒரு காட்சி தேறாது. அந்த கதையின் ஸ்கெலிடல் ஸ்ட்ரெக்சரை எடுத்து கடம்பனை எடுப்பதாக தகவல்.


 
 
ஆனால் எந்தளவு உண்மை என்பது படம் வெளிவந்தால்தான் தெரியும்.
 
இவையிரண்டையும்விட முக்கியமானது ரஜினியின் கபாலி. கபாலிடா நெருப்புடா என்று தமிழகம் பருப்பு வேக வைத்துக் கொண்டிருக்கையில் மணிரத்னத்தின் தளபதி, நாயகன் படங்களின் கலவைதான் கபாலி என்று ஷாக் தந்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் தாணு. இதற்கா இந்த பில்டப் என்று கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் அருணன் கடுப்படிக்கும் அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறது.
 
தமிழ் சினிமாவின் பிற காப்பிகள் அடுத்தடுத்த கட்டுரைகளில்.