1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2016 (13:26 IST)

சினி பாப்கார்ன் - மானம், வெட்கம், ரோசம்.... மற்றும் அருவருப்பு

சினி பாப்கார்ன் - மானம், வெட்கம், ரோசம்.... மற்றும் அருவருப்பு

மன்னிக்க வேண்டுகிறேன்
 
த்ரிஷா நடித்திருக்கும் முதல் நாயகி மையப்படம், நாயகி. படம் நேற்று வெளியானது. ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு, அக்கறையில் ஒருசதவீதம்கூட த்ரிஷாவிடம் இல்லை. படத்தை எந்தவகையிலும் அவர் புரமோட் செய்யவில்லை. திடீரென்று லேடி அஜித்தாவது என்று முடிவு செய்துவிட்டாரோ என்று ரசிகர்கள் ட்விட்டரில் கேள்விகளால் துளைத்துவிட்டனர்.
 
அதற்கு பதிலளித்தவர், நான் பேசலைன்னா அதுக்கு ஒரு காரண காரியம் இருக்கும். மீடியா நண்பர்களும், ரசிகர்களும் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பணிவான ஒரு ட்வீட்டை போட்டார்.
 
நாயகியில் என்ன பிரச்சனை என்பதை அவரே விளக்கவும் இருப்பதாக கூறியிருப்பதால், ஆளாளுக்கு கற்பனை குதிரையில் ஏறாமல் த்ரிஷாவின் விளக்கத்துக்காக காத்திருக்கலாம்.

 
மானம், வெட்கம், ரோசம்...
 
கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான நடத்தப்பட்ட வெறியாட்டத்தை ஒழுங்கு செய்ததும், திட்டமிட்டு அரங்கேற்றியதும் பாரதிய ஜனதா கட்சி. கர்நாடகத்துக்கு எதிராக பேசுவது டவுசர் பாய்ஸ்களுக்கே எதிரானது என்பதால் தமிழிசை தலைமையிலான தமிழக பாஜக அடக்கியே வாசித்தது. நேற்று நடந்த பந்தில் கலந்து கொள்வதற்குக்கூட அவர்களுக்கு வக்கில்லை.
 
மாநில ஆட்சி பாரதிய ஜனதா கையில், மத்தியிலும் அவர்கள் ஆட்சி. ஆனால் காவிரி பஞ்சாயத்தை ரஜினி பேசி தீர்க்க வேண்டும் என்று கூச்சமே இல்லாமல் பேட்டி தருகிறார் தமிழிசை. அவரது பேட்டியை கேட்டு மனஉளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு மருந்து தடவுவது போல் பேசினார் இயக்குனர் அமீர். ஓட்டு கேட்க மக்களிடம் வருவீங்க, ஆனா, காவிரி பிரச்சனையை ரஜினி தீர்க்கணுமா? மானம், ரோசம், சூடு, சொரணை எதுவும் உங்களுக்கு இல்லையா என்று நாம் தமிழர் நிகழ்ச்சியில் அவர் காட்டு காட்டென்று காட்ட, அனைவரும் ஹேப்பி.
 
சில நேரம் மேடை நாகரிகத்தை தூர வைத்தால்தான் சரியாவரும் போலிருக்கு.
 
ஆத்தா... அவ்ளோ அருவருப்பா?
 
ப்ரியதர்ஷனிடம் விவாகரத்து பெற்ற கையோடு ஆவி பறக்க ஒரு அறிக்கை வெளியிட்டார் நடிகை லிஸி. ப்ரியதர்ஷனுடன் ஒரு அருவருக்கத்தக்க வாழ்க்கை வாழ்ந்ததாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வார்த்தை லிஸியை அறிந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
 
ப்ரியதர்ஷனின் சித்திரம் உள்ளிட்ட படங்களில் லிஸி நடித்து உச்சத்தில் இருந்தபோது அவர்களின் திருமணம் நடந்தது. காதல் திருமணம். அவர்களின் காதல் வெகுவிரைவிலே கசப்புக்கு மாறியதை லிஸியின் கடுமையான வார்த்தைப் பிரயோகம் தெரியப்படுத்துகிறது.
 
லிஸியின் வாழ்க்கை இனியேனும் அவர் விரும்பிய திசையில் பயணிக்கட்டும்.