1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : திங்கள், 23 பிப்ரவரி 2015 (12:15 IST)

87 -வது ஆஸ்கர் விருதுகள் முழுப்பட்டியல்

87 -வது ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. விருது பெற்ற படங்கள் மற்றும் கலைஞர்களின் விவரம் -
 
சிறந்த புரொடக்ஷன் டிஸைன்
 
த கிராண்ட் புதாபெஸ்ட் திரைப்படத்துக்காக இந்த விருது Adam Stockhausen, Anna Pinnock ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
 
பிக் ஹீரோ 6 திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதை வென்றுள்ளது. 
 
சிறந்த அனிமேஷன் குறும்படம்
 
பீஸ்ட் குறும்படம் இந்த விருதை வென்றுள்ளது.
 
சிறந்த விஷுவல் எஃபெக்ட்
 
கடும் போட்டி நிலவிய இந்தப் பிரிவில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இன்டர்ஸ்டெல்லர் விருதை தட்டிச் சென்றது. இந்தப் படத்துக்கு விஷுவல் எஃபெக்ட் அமைத்த Paul J. Franklin, Andrew Lockley, Ian Hunter, Scott R. Fisher ஆகியோர் விருது பெற்றனர்.
 
சிறந்த துணை நடிகை
 
சிறந்த திரைப்படம் உள்பட பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம், பாய் ஹுட். இதில் நடித்த Patricia Arquette  சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார்.
 
சிறந்த சவுண்ட் எடிட்டிங்
 
அனைவரும் எதிர்பார்த்தது போலவே அமெரிக்கன் ஸ்னிப்பர் படத்துக்காக Alan Robert Murray, Bub Asman  ஆகியோர் சிறந்த சவுண்ட் எடிட்டிங்கிற்கான விருதை பெற்றுள்ளனர்.
 
சிறந்த சவுண்ட் மிக்சிங்

ட்ரம் இசைக்கலைஞனையும், இசை பயிற்சியாளரையும் பின்னணியாகக் கொண்டு தயாரான படம் விப்லாஷ். சிறந்த சவுண்ட் மிக்சிங்கிற்காக இந்தப் படத்தில் பணிபுரிந்த Craig Mann, Ben Wilkins, Thomas Curley  ஆகியோர் விருது பெற்றனர்.
 
சிறந்த டாக்குமெண்ட்ரி, ஷார்ட் சப்ஜெக்ட்
 
இந்தப் பிரிவில் போட்டியிட்ட, கிரிஸ்சிஸ் ஹாட் லைன் - வெட்டரன்ஸ் பிரஸ் 1 விருது வென்றுள்ளது.
 
சிறந்த குறும்படம் - லைவ் ஆக்ஷன்
 
இந்தப் பிரிவில் த போன் கால் குறும்படம் விருது வென்றது. 
 
சிறந்த வெளிநாட்டுமொழி திரைப்படம்
 
இந்தப் பிரிவில் இடா என்ற போலந்து நாட்டு திரைப்படம் ஆஸ்கர் வென்றுள்ளது. இந்தப் படத்தை Pawel Pawlikowski இயக்கியிருந்தார்.
 
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்
 
இந்தப் பிரிவில், த கிராண்ட் புதாபெஸ்ட் படத்துக்காக பிரான்சஸ் ஹன்னன், மார்க் கௌலியர் விருது பெற்றனர்.
 
சிறந்த உடையலங்காரம்
 
இந்தப் பிரிவிலும், த கிராண்ட் புதாபெஸ்ட் படத்துக்காக Milena Canonero  விருது பெற்றார்.
 
சிறந்த துணை நடிகர்
 
கடும் போட்டி நிலவிய இப்பிரிவில் விப்லாஷ் படத்தில் இசை கன்டெக்டராக நடித்த ஜே.கே.சிம்மன்ஸ் விருது வென்றார்.
 
சிறந்த டாக்குமெண்ட்ரி, பியூச்சர்
 
இந்தப் பிரிவில் சிட்டிசன்ஃபேர் ஆவணப்படம் விருது வென்றுள்ளது.

சிறந்த எடிட்டிங்
 
இந்தப் பிரிவில் விப்லாஷ் ஆஸ்கர் வென்றுள்ளது.
 
சிறந்த ஒளிப்பதிவு
 
அலெஜான்ட்ரோ கொன்சலஸ் இனாரித்து இயக்கிய இப்படம் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெறுகிறது. விருது பெற்றவர் ஒளிப்பதிவாளர் Emmanuel Lubezki.
திரைப்படத்துக்கான இசை -ஒரிஜினல் பாடல்
 
இந்தப் பிரிவில் செல்மா படத்துக்காக Common, John Legend  ஆகியோர் விருது பெற்றனர்.
 
திரைப்படத்துக்கான இசை - ஒரிஜினல் பின்னணி இசை
 
இந்தப் பிரிவில், த கிராண்ட் புதாபெஸ்ட் திரைப்படத்துக்காக Alexandre Desplat  விருது பெற்றுள்ளார்.
 
சிறந்த தழுவல் திரைக்கதை
 
இந்தப் பிரிவில், த இமிடேஷன் கேம் படத்துக்கு திரைக்கதை எழுதிய கிரஹாம் மூர் ஆஸ்கர் வென்றார்.
 
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை
 
பேர்ட்மேன் திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதிய Alejandro González Iñárritu, Nicolás Giacobone, Alexander Dinelaris, Armando Bo  ஆகியோர் விருது பெற்றனர்.
 
சிறந்த இயக்குனர்
 
மதிப்புமிக்க இந்த விருதை பேர்ட்மேன் திரைப்படத்துக்காக அலெஜான்ட்ரோ கொன்சலஸ் இனாரித்து பெற்றார்.
 
சிறந்த நடிகர்
 
த தியரி ஆஃப் எவ்ரிதிங் படத்தில் நடித்ததற்காக நடிகர் Eddie Redmayne  சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார்.
 
சிறந்த நடிகை
 
ஸ்டில் ஆலிஸ் திரைப்படத்தில் நடித்த Julianne Moore    சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.
 
சிறந்த திரைப்படம்
 
ஆஸ்கரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த விருதை அலெஜான்ட்ரோ கொன்சலஸ் இனாரித்து இயக்கிய பேர்ட்மேன் பெற்றது.