வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : புதன், 25 மார்ச் 2015 (15:40 IST)

62 -வது தேசிய விருதுகள் முழு விவரம்

62 -வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த பாடலாசிரியர், சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம், சிறந்த எடிட்டர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த துணை நடிகர் ஆகிய விருதுகள் தமிழுக்கு கிடைத்துள்ளன.
சினிமாவைப் பற்றிய சிறந்த புத்தகம் என்ற சிறப்பு தேர்வில், தயாரிப்பு நிர்வாகி தனஞ்செயன் எழுதிய, பிரைட் ஆஃப் தமிழ் சினிமா தேர்வாகியுள்ளது. சிறந்த தமிழ்ப் படமாக குற்றம் கடிதல் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
முழு விருதுப் பட்டியல் கீழே - 
 
சிறந்த படம் - கோர்ட் (மராத்தி)
 
சிறந்த இயக்குநர் -  ஸ்ரீஜித் முகர்ஜி (சோட்டூஷ்கோனே, வங்காளம்)
 
சிறந்த தமிழ்ப் படம் - குற்றம் கடிதல்
 
சிறந்த இந்தி படம் - குயின்
 
சிறந்த நடிகை -  கங்கனா ரனவத் (குயின், இந்தி)
 
சிறந்த நடிகர் -  விஜய் (நானு அவனல்ல அவளு, கன்னடம்)
 
சிறந்த உறுதுணை நடிகர் -  பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா, தமிழ்)
 
சிறந்த உறுதுணை நடிகை -  பல்ஜிந்தேர் கவுர் (பக்டி தி ஹானர், ஹரியானா)
 
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - மேரி கோம் (இந்தி)
 
சினிமாவைப் பற்றி சிறந்த புத்தகம் -  சைலண்ட் சினிமா் (1895 – 1930), பசுபுலெடி பூர்ணசந்திர ராவ்
 
சினிமாவைப் பற்றி சிறந்த புத்தகம் (சிறப்புத் தேர்வு) – ப்ரைட் ஆஃப் தமிழ் சினிமா, ஜி.தனஞ்செயன்
 
சிறந்த சினிமா விமர்சகர் – தனுல் தாகூர்
 
சிறந்த குறும்படம் – மித்ரா
 
சிறந்த இசை – பாடல்கள் -  விஷால் பரத்வாஜ், ஹைதர் (இந்தி)
 
சிறந்த இசை – பின்னணி இசை -  கோபி சுந்தர், 1983 (மலையாளம்)
 
சிறந்த பின்னணிப் பாடகி் -  உத்தரா உன்னி கிருஷ்ணன், பாடல் – அழகே (சைவம், தமிழ்)
 
சிறந்த பின்னணிப் பாடகர் - சுக்விந்தர் சிங் பாடல் – பிஸ்மில், (ஹைதர், இந்தி)
 
சிறந்த நடன அமைப்பு் - ஹைதர் (பாடல் - பிஸ்மில், இந்தி)
 
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - சவுண்ட் ஆஃப் ஜாய்
 
சிறந்த புலனாய்வுத் திரைப்படம் - ஃபும் ஷாங்
 
சிறந்த சாகசத் திரைப்படம் -  இன்டியாஸ் வெஸ்டர்ன் காட்ஸ்
 
சிறந்த கல்வித் திரைப்படம் -  கோமல் & பிஹைண்ட் தி கிளாஸ்
 
சிறந்த ஆடை வடிவமைப்பு -  டாலி அஹ்லுவாலியா (ஹைதர், இந்தி)
 
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறந்த படம் -  ஒட்டால் (மலையாளம்)
 
சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது -  ஆஷா ஜாவோர் மாஜே – வங்காளம்


 
 
சிறந்த திரைப்படம், சிறப்பு தேர்வு – மொழி வாரியாக
 
சிறப்பு விருதுக்கான படங்கள்
 
ஐன் (மலையாளம்)
 
நச்சோம் – ஐஏ கும்பசார் (கொங்கனி)
 
கில்லா (மராத்தி)
 
பூத்நாத் ரிடர்ன்ஸ் (இந்தி)
 
மாநில மொழி சிறந்த படங்கள்
 
குயின் – இந்தி
 
பஞ்சாப் 1984 – பஞ்சாபி
 
குற்றம் கடிதல் – தமிழ்
 
சந்தாமாமா கதலு – தெலுங்கு
 
ஐன் – மலையாளம்
 
கில்லா – மராத்தி
 
ஆதிம் விசார் – ஒடியா
 
ஹரிவு – கன்னடம்
 
ஐஏ கும்பசார் – கொங்கனி
 
ஒதெல்லோ – அசாமீஸ்
 
நிர்பஷிடோ – வங்காளம்

தேசிய அளவில் சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் காக்கா முட்டை திரைப்படமும், சிறந்த மாநில மொழி திரைப்படங்கள் பிரிவில் தமிழிலிருந்து சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் குற்றம் கடிதலும், தயாராகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. ஆனால் அவ்விரண்டு படங்களும் இன்னும் திரைக்கு வரவில்லை. 
காக்கா முட்டை படத்தை வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து தயாரித்திருந்தனர். சர்வதேச திரைப்பட விழாக்களில் படம் திரையிடப்பட்டது. எனினும் படத்தை இன்னும் திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை. அதேபோல்தான் குற்றம் கடிதல் படமும்.
 
கலாபூர்வமான படங்களுக்கு தமிழகம் என்ன மரியாதையை தருகிறது என்ற கேள்வியை இவ்விரு படங்களும் எழுப்புகின்றன. இந்தப் படங்களின் தயாரிப்பாளர்களின் பொருளாதார நெருக்கடியைத் தாண்டி ஏதோ ஒன்று, இந்தப் படங்கள் திரைக்குவர தடையாக உள்ளது. 
 
படத்தை வாங்கினால் போட்ட காசை எடுக்க முடியுமா என்ற விநியோகஸ்தர்களுக்கு, திரையரங்கு உரிமையாளர்களுக்கு அச்சம். இந்த அச்சத்தை உருவாக்குவது பார்வையாளர்கள். நாலு சண்டை ஆறு பாட்டுதான் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற தோற்றத்தை பார்வையாளர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். அதனால் ஏற்பட்ட அச்சம்தான் விருதுக்கு தகுதிபெற்ற இரு படங்களை இன்னும் வெள்ளித் திரைக்கு வரவிடாமல் செய்திருக்கிறது. அந்த அச்சத்தைப் போக்க வேண்டியது, பார்வையாளர்களின் கடமை. 
 
நாலு சண்டை, ஆறு பாட்டு என்ற வழக்கமான சினிமாவை புறந்தள்ளினாலே காக்கா முட்டை, குற்றம் கடிதல் போன்ற படங்களுக்கு வழி கிடைக்கும்.