புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்!!

முருகனின் ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் ஆறு நாட்கள் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப்  பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.
ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன. அவை திருப்பரங்குன்றம் - மூலாதாரம், திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம், பழனி - மணிபூரகம், சுவாமிமலை - அனாஹதம், திருத்தணிகை - விசுத்தி, பழமுதிர்சோலை - ஆக்ஞை.
 
ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த சஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி  வாரிதியில் மூழ்குவோம். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில்.  சூரசம்ஹாரத்தின் போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின்சூரனை இரு கூறாக்கியதில் வந்த மயில்தான்  அசுர மயில்.
ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத்  தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடிவிடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங்களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே  மிகப் பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான். கந்தன் பல  பெயர்களால் போற்றப்படுகிறான்.