ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 2 மே 2022 (09:51 IST)

வாழ்வில் வளம்பெற அட்சய திருதியை நாளில் என்ன செய்யவேண்டும்...?

Akshaya Tritiya
சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை நட்சத்திரம் அட்சய திருதியை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை மே 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (நாளை) கொண்டாடப்படுகிறது.


அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நமக்கு நன்மையை கொடுக்கும்.

அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வாழ்க்கையில் செல்வம் கொழிக்கும். புராண காலத்தில் சித்திரை மாதம் வளர்பிறையின் மூன்றாவது நாள் செய்யும் எந்த வேலையும் விருத்தியாகும் என்றும், வேத காலங்களில் சான்றோர்கள் அட்சய திருதியை அன்று யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும், அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டு செல்லவும் கூறினார்கள்.

அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளின் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும், நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து.

அட்சய திருதியை அன்று தானம் செய்தால் ஆயுள் பெருகும். கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வில் வளம் பெருகும். மேலும் தங்கம், வெள்ளி வாங்குவது சிறந்தது ஆகும். தங்கம் வாங்குவதை விட உப்பு அல்லது மஞ்சள் வாங்கினால், தங்கம் வாங்குவதை காட்டிலும் பலன் அதிகம்.