வாஸ்துப்படி பீரோவை வைக்க ஏற்ற திசை எது...? ஏன்...?

ஒருவரது வீடு வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், அந்த வீட்டில் சந்தோஷம் பெருகும். செல்வம் குவியும். சண்டைகள் அகலும், மனநிம்மதி பெருகும். இந்த வாச்து சாஸ்திரத்தில் பலருக்கும் நம்பிக்கை உள்ளது.
 
ஒருவரது வீட்டில் வாஸ்துப்படி பணம் வைக்கும் பெட்டி அல்லது பீரோ இருந்தால், அந்த வீட்டில் செல்வம் அதிகம் பெருகும். இங்கேதான் நமக்கு வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது.
 
பீரோ வைக்க ஏற்ற திசை:
 
வடமேற்கில் பீரோ, பணப்பெட்டி முதலியவை இருந்தால், பணம் வருவதும், போவதுமாக இருப்பதுடன், சேமிக்க முடியாததுடன்  கடன்காரனாகவும் மாற்றி துன்பப்பட வைக்கும்.
 
தென்கிழக்கில் பணப்பெட்டி இருக்குமேயானால், விரயச் செலவுகளையும், கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காத தன்மையையும் ஏற்படுத்தும்.  ஏமாற்றப்படுவார்கள்.
 
கிழக்கில் பீரோ இருக்குமாயின் பணம் பலவழிகளில் வந்தாலும், நோய்க்குச் செலவு செய்வதில் பெரும்பகுதியும், குழந்தைகளின் தவறான செயல்களினால் பெரும்தொகையுமாக வீண் செலவுகளை ஏற்படுத்தும். வீட்டில் கவலை குடிகொள்ளும்.
தெற்குப் பார்த்த வீட்டின் வடக்குச் சுவர் ஓரமாக, தெற்குப் பார்த்து பீரோ வைத்திருப்பவர்கள் வீட்டில், பெண்களுக்கு வைத்திய செலவை  அதிகப்படுத்தும்.
 
மேற்குப் பார்த்த வீட்டுக்குக் கிழக்குச் சுவர் சார்ந்து, மேற்குப் பார்த்து பீரோ இருக்குமேயானால், ஆண்கள் தேவையற்ற வீண்செலவுகளைச்  செய்வார்கள். ஆண்களுக்கு நோய்க்கான செலவுகள் அதிகரிக்கும்.
 
கிழக்குப் பார்த்து பீரோவை வைத்தால், மகிழ்ச்சியான செலவுகளைத் தந்து, நிம்மதியையும் லாபத்தையும் தரும். கண்டிப்பாக செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். மங்கள காரியங்கள் மனையில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :