வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (10:55 IST)

பிரதோஷ காலம் என நாம் எதனை குறிப்பிடுகின்றோம்...?

சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது. மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷம் வருகிறது.


பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர். தியோத திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் ஆகும்.

தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலில் உள்ள அமிர்தத்தை பெற வேண்டி வடவரை என்னும் மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் வைத்து திருப்பாற்கடலை கடைந்தனர்.

இந்நிகழ்ச்சியை சிலப்பதிகாரமும், ஆய்ச்சியர் குரவை என்ற பகுதியில் வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி பண்டொரு நாள் கடல் வயறு கலக்கினையே என கூறுகிறது. தேவர்களும், அசுரர்களும் திருபாற்கடலை கடைய துவங்கியதும் வேதனை தாளாத வாசுகி நாகம் விஷத்தை கக்கியதால் வெளியே வந்த ஆலகால விஷம் தேவர்கள், அசுரர்களை நெருங்க அதன் வெப்பம் தாங்காத அனைவரும் சிவபெருமானை தஞ்சம் அடைந்தனர்.

சிவபெருமான் சக்தியுடன் நந்தி பகவானின் இரண்டு கொண்டுகளில் நடுவே பிரன்னமாகி எங்கும் பரவியிருந்த விஷத்தை உளுந்து அளவாக்கி அனைவரையும் காப்பாற்றுவதற்காக ஆலகால விஷத்தை தான் உண்டார். அதுகண்டு பயந்து நின்ற பார்வதிதேவியும் இறைவனுக்கு விஷத்தால் ஏதும் இன்னல்கள் ஏற்பட்டு விடக்கூடாது என கருதி சிவபெருமானது கண்டத்தில் (கழுத்தில்) தன் கையை வைத்து அவ்விஷத்தை கழுத்திலேயே நிலைத்திருக்க செய்தார்.

இதனால் ஆலகால விஷம் சிவபெருமானின் கழுத்து பகுதியிலேயே தேங்கி நின்று நீலகண்டம் ஆயிற்று. நஞ்சுண்டு இருந்ததால் நஞ்சுண்டவன் என சிவன் அழைக்கப்படுகிறார். பெயர்தக்க நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என வள்ளுவர் குறிப்பிட்டது போல நஞ்சுண்டு உலகத்தை காத்த அந்த நேரத்தை பிரதோஷ காலம் என கூறுகிறோம்.