புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அட்சய திருதியை நாளில் என்னென்ன காரியங்கள் செய்யவேண்டும்...?

கங்கை, யமுனை, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் புனித நீராட புண்ணியங்களை தரும். அட்சய திருதியை அன்று உண்ணா விரதமிருந்து திருமால் மற்றும்  மகாலட்சுமியை பூஜிக்க உகந்த நாளாகும்.

பரசுராமர் ஜெயந்தி என்பதால் பரசுராமரை பூஜிக்க வேண்டும். லட்சுமி குபேர பூஜை செய்ய நன்மைகள் பெருகும்.
 
இந்நாளில் ஞானத்தை பெற தானங்கள் செய்ய ஏற்ற நாளாகும். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய உகந்த நாளாகும்.
 
ஏழை எளியவர்களுக்கு இந்நாளில் தானியங்களை, உடைகளை தானமாக அளிப்பது பாவங்களைப் போக்கும்.
 
யாகங்கள், வேத பாராயணங்கள் செய்யலாம் புதிய காரியங்களை துவக்கலாம். பரிசில்களை வழங்கலாம்.
 
தங்கம், வெள்ளி, வைரம், சாளகிராமம், உருத்திராட்சம் வாங்கலாம். இந்நாளில் வாங்குவதால் பொருளாதார பஞ்சங்கள் நீங்கும்.
 
புதிய தானியங்களை வாங்குவதால் தானிய பஞ்சங்கள் தீரும். தானியங்களை வைத்து பூஜைகள் செய்ய உகந்த நாளாகும். தயிர் சாதத்தை ஏழைகளுக்கு  அன்னதானமாக வழங்க முன் ஜென்ம பாவங்கள் தீரும்.