வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

குபேர முத்திரையை செய்வதால் என்ன பலன்கள்...!!

குபேரன் செல்வத்தின் அதிபதி. அவருடைய திசை வடக்கு. நமது உடலில் வடக்கு திசை சிரசைக் குறிக்கும். எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். இறைவன்  குடியிருக்கும் இடம் சிரசு. குபேர முத்திரையின் மூலம் சிரசின் சக்கரங்கள் இயக்கப்படுகின்றன.

குபேர முத்திரையை அதிகாலையில் செய்வது சிறப்பு. சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, கண்களை மூடி, ஆள்காட்டி விரல் நுனி, நடு விரல் நுனி மற்றும் கட்டை விரல் நுனி ஆகியவற்றை சேர்த்துவைக்கவும்.
 
மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நுனிகளை மடக்கி உள்ளங்கை பகுதியில் அழுத்தி வைத்துக்கொள்ளவும். இந்த நிலையில் உள்ளங்கை மேல்நோக்கி இருக்கவேண்டும். முதலில் செய்ய சிரமமாக இருக்கும். பழகப் பழக எளிதாகிவிடும்.
 
இவ்வாறு செய்யும் முத்திரைக்கு குபேர முத்திரை என்று பெயர். இந்த முத்திரையை நேர கணக்கு எதுவும் வைத்துக்கொள்ளாமல் எவ்வளவு நேரம்  வேண்டுமானாலும் செய்யலாம்.
 
இந்த முத்திரையை செய்வதால் மனதில் உள்ள ஆசைகள் விரைவில் நிறைவேறும். பொருளாதார பற்றாக்குறைகள் விரைவில் நீங்கும்.
 
பெரு விரல் சுக்கிரனையும், ஆள் காட்டி விரல் குருவையும், நடு விரல் சனியையும் குறிக்கும். இந்த மூன்று விரல்களையும் சேர்த்து பிடிப்பதால் சனி, குரு, சுக்கிரன்  சேர்க்கை ஏற்படுகிறது. இந்த கிரக சேர்க்கை பொருளாதார வசதிகளை பெருக்கும் கிரக சேர்க்கையாகும்.