திங்கள், 9 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சந்திராஷ்ட நாட்கள் என்பது என்ன? அதை எவ்வாறு கண்டறிவது...?

நாம் தினமும் காலண்டரை பார்க்கும்போது சரி, அதில் ராசிபலன் பக்கத்தில் கீழே இன்று சந்திராஷ்டமம் பெறும் ராசி என்று போடப்பட்டிருக்கும். ஆனால் நமக்கு அதைப்பற்றி தெரியாது. பெரும்பாலானோர் அதை பொருட்படுத்துவதும் இல்லை. 
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மிக முக்கியமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். பிறந்த ராசி  என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும். 
 
சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். 
 
சந்திராஷ்டமம் = அஷ்டமம் + சந்திரன். உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம்  என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம்  ஆகும். 
 
மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள், பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். 
 
புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களையும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்  டாகின்றன.
 
எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும்  கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும். 17-ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன். உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில்  அறிந்துகொள்ள உதவும் பட்டியல் அருகில் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
உங்கள் நட்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம  நட்சத்திரம் குறித்து விளக்கமாக பெட்டிச் செய்தி தரப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நட்சத்திர வரும் நாட்களில், நிதானமாகவும் கவனமாகவும்  இருப்பது நலம் தரும்.