வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

நம் வீட்டில் செல்வ வளம் பெருக செய்யவேண்டியவை என்ன தெரியுமா...?

மல்லிகை லட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பூ. அதேபோல் பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும். மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும். 
அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர். இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண  ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.
 
இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று, ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
 
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்:
 
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி. 
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!
 
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம்:
 
ஓம், ஏம், ஐம், க்லாம், க்லீம், க்லூம், ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம் 
சகவம்ஸ ஆபதுத் தோரணாய, அஜாமிள பந்தநாய, லோகேஸ்வராய,
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மமதாரித்ரிய வித்வேஷணாய,
ஓம், ஸ்ரீம், மஹா பைரவாய நமஹ.
 
லட்சுமி காயத்ரி மந்திரம்:
 
ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி 
ஸ்வஹ் காலகம் தீமஹி 
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
 
இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள். இந்த மந்திரத்தை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் ஜபிப்பது மேலும் சிறப்பாகும். மந்திரத்தை ஜெபிக்கும் முன்பு வீட்டில்  விளக்கேற்றி பிள்ளையாரையும் லட்சுமி தேவியையும் நன்கு வணங்கிவிட்டு ஜபிக்க வேண்டும்.