வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (07:03 IST)

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கும்பம்!

Monthly astro
கிரகநிலை:
ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில்  புதன், சுக்  - சுக ஸ்தானத்தில் சூர், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.




கிரகமாற்றங்கள்:
20-05-2024 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
24-05-2024 அன்று புதன் பகவான்  தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-05-2024 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
09-06-2024 அன்று புதன் பகவான்  சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-06-2024 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
நியாயத்தின் பக்கம் நிற்கும் கும்ப ராசி அன்பர்களே, நீங்கள் அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர். இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.

பெண்கள் பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.

அரசியல் துறையினருக்கு இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அவிட்டம்:
இந்த மாதம் பணதேவை ஏற்பட்டாலும் அதை   திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடி யான சூழ்நிலை  ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. 

ஸதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை  அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும்.

பூரட்டாதி:
இந்த மாதம் மற்றவர்களால் ஏற்படும்  தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக  செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும்.

பரிகாரம்: முருகனுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

சந்திராஷ்டம தினங்கள்:  மே 23, 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்:  மே 16, 17; ஜூன் 12, 13, 14